தமிழகப் புயல் » Sri Lanka Muslim

தமிழகப் புயல்

sasika6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


அன்னை போன பின்
சென்னை அழுகிறது.
செத்ததை நினைத்தும்
சொத்தை நினைத்தும்

சின்னம்மா சொல்லுக்கு
என்னமா தலையாட்டுகின்றன
மரத்துப் போன
மந்திரி மரங்கள்.

கழுவிக் கழுவி
ஊத்துகின்றன
ஊடகமும்
உடைந்த வானமும்.

புதிதாக ஒட்டிய
போஸ்டர்களைக் கண்டு
கொதித்து எழும்பி
கிழித்து எறிகிறது
புயல்.

அப்பலோ பில் போல்
உப்பு நீர் எழும்பி
கரை கடந்து வந்து
கரைக்கிறது வாழ்வை.

வர்தா வருத்துவதிலும் – சில
குர்தா ஆண்களால்
குழம்பிக் கிடக்கிறது
தமிழகம்.

நோட்டால் நொந்து
வார்ட்டால் வெந்த
தமிழ் நாடு
காற்றால்
கலங்கி நிற்கிறது.

சென்னைப் புயல்
சீறி அடங்கினாலும்
சின்னம்மாப் புயலில்
சின்னா பின்னமாகலாம்
சில கட்சிகள்.

Web Design by The Design Lanka