தமிழக கவிஞர் சுகிர்தராணி 'மாட்டுக்கறி' பற்றி எழுதிய கவிதை இது. » Sri Lanka Muslim

தமிழக கவிஞர் சுகிர்தராணி ‘மாட்டுக்கறி’ பற்றி எழுதிய கவிதை இது.

beaf

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-சுகிர்தராணி-


மாட்டுக்கறிவாசனை வீசும் நான்
புனிதமற்றவள்தான்..
00

என்னை புனிதமானவளாக்குவதற்கு
பசுமூத்திரத்தை என்மீது தெளிக்காதே
எரித்த சாணத்தை என்நெற்றியில் பூசாதே.
00

கோமாதா உனக்குத் தெய்வமா?
அந்தத் தெய்வத்தின் தோலையா
செருப்பாக அணிந்து கொள்கிறாய்?
00

கோமாதா உனக்குக் கடவுளா?
அந்தக் கடவுளின் இரத்தத்தையா
நீ பாலாகக் குடிக்கிறாய்?
00

மாட்டுக்கறியை நான் தின்கிறேன் என்று
கூப்பாடு போடும் நீ
என்னைச் செருப்பணிய விட்டாயா?
00

பசுவை வீட்டுக்குள் வரவழைக்கும் நீ
என்னைச் சேரியிலிருந்து ஊருக்குள் வரவிட்டாயா?
00

கோவிலுக்குள் மணியாட்டி கற்பூரம் காட்டும் நீ
கைத்தொழ கருவறைக்குள் என்னை விட்டாயா?
00

மதத்திற்கும் மாட்டுக்கும் முடிச்சுபோடும் நீ
மதத்திற்கும் மதச்சார்பற்ற நாட்டிற்கும்
முடிச்சுப்போட்டுப் பார்த்தாயா?
00

இது மதச்சார்பற்ற நாடு…
மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு உரிமையுண்டு
மாட்டுக்கறியைத் தேர்ந்தெடுக்கவும் உரிமையுண்டு.
00

என்ன உரிமை இருக்கிறது உனக்கு
என்னை ஆள?
00

மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக
தாத்ரியில் அடித்துப் படுகொலை செய்தாயே..
ஏற்றுமதி செய்வதற்காக
மாடுகளையே வெட்டிக் கொல்லும்
உன்னை என்ன செய்வது?
00

நீ மாட்டிறைச்சிக்கு தடைபோட்டால்
மாட்டிறைச்சித் திருவிழா நடத்துவோம்
மாட்டிறைச்சித் திருவிழாவுக்கே தடைபோட்டால்
இனி தெருவுக்கொரு மாடறுப்போம்.!
00

வேண்டுமானால்
உன் மலத்தை நீ தீர்மானித்துக்கொள்
என் உணவை, என் மாட்டுக்கறியை
நான்தான் தீர்மானிப்பேன்!

Web Design by The Design Lanka