தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன்! - Sri Lanka Muslim

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன்!

Contributors

இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் நடந்த படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணைபோன கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

அதேபோல், தமிழர் விஷயத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக அரசுக்கு எதிராகவும் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள்.

மீனவர்கள் பிரச்சினையை பொறுத்தமட்டில் இந்திய அரசு தமிழர்களை தனது நாட்டு மக்களாகவே கருதுவதில்லை.

அதனால்தான் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனை தடுக்கவும், மீனவர்கள் தங்களை தற்காத்து கொள்ளவும் வசதியாக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்.

உள்ளூர் மக்கள் தங்களை பாதுகாக்கும் வண்ணம் ஊர்காவல் படை அமைத்து பயிற்சி அளிக்கப்படுவது போல் மீனவர்களுக்கும் பயிற்சி கொடுத்து தங்களை தாங்களே காத்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team