தமிழக மீனவர்கள் 34 பேர் கடற்படையினரால் கைது - Sri Lanka Muslim

தமிழக மீனவர்கள் 34 பேர் கடற்படையினரால் கைது

Contributors

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 34 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் பயணித்த ஒரு படகு தற்போது பறிமுதல் செய்யப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team