தமிழர்களும்,முஸ்லிம்களும் குறைகூறும் சமூகமாக மாறி வருகின்றனர். எம்.ரி.ஏ.நிசாம். - Sri Lanka Muslim

தமிழர்களும்,முஸ்லிம்களும் குறைகூறும் சமூகமாக மாறி வருகின்றனர். எம்.ரி.ஏ.நிசாம்.

Contributors

தமிழர்களும் முஸ்லிம்களும் குறைகூறும் சமூகத்தினராக மாறிவருகின்றனர் .
எனக்கு தினசரி 2 வகையான கடிதங்கள் கிடைக்கின்றன . அவற்றில் 60 வீதமானவை குறைகூறும் கடிதங்களாகவே இருக்கின்றன என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம் தெரிவித்துள்ளார் .
கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ெதரிவித்தார் .
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது : –
 மோசமான ஒரு நிலையில் இன்று கல்விச் சமூகம் உள்ளது . இந்த நிலை மாற வேண்டும் . மனித உரிமை மீறல் என்ற காரணத்தினால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலையே அது . இதனால் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன . மாணவிகளுக்கான ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கின்றன . இவ்வாறான நிலைமையினால் மாணவர்களை தண்டிக்க முடியவில்லை .
எனவே , அவர்களுக்கு ஆன்மிக வேலி அவசியமாகவுள்ளது . மனக்கட்டுபாட்டுடன் மாணவர்கள் வாழ வேண்டும் . இதற்கு தங்களால் உதவ முடியுமா என்று இங்கு ஆசியுரை வழங்கிய இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சதுர்பு ஜானந்தாவுடன் உரையாடியபோது கோரினேன் . அதனை வரவேற்ற சுவாமி இந்தியாவில் தலைமைப்பீடத்துடன் கலந்துரையாடி முடிவு எடுப்பதாகக் கூறினார் . இந்த விடயத்தில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும் . எதிர்காலம் மிகப் பயங்கரமானது . போட் டிமிக்கது . இதற்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் மாணவர்களை கவனமாக ஒன்றிணைக்க வேண்டும் . க . பொ . த உயர்தரப்பரீட்சையில் மாவட்ட மட்ட அனுமதி விடயத்தில் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார் .(tn)

Web Design by Srilanka Muslims Web Team