தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை - Sri Lanka Muslim

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அன்புடையீர்!

நீங்கள் அனைவரும,; பல்வேறு விஷமத்தனமான பொய்பிரச்சாரங்களை நம்பி என்னைத்தோற்றகடித்ததுக்காக நான் கவலைப்படவில்லை. 60 ஆண்டுகள் அரசியலில் அயராது உழைத்தவன் நான.; பெரும் தலைவர்கள் திருவாளர் ஜி.ஜி பொன்னம்பலம் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம,; மு.சிவசிதம்பரம் ஆகியோருடன் நெருங்கி பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவன்.

1970ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதில் இருந்து இன்றுவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் நான் கற்ற தொழிலாகிய சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு, ஆகிய பதவிகளை கைவிட்டு, மக்கள் சேவையை இலட்சியமாகக் கொண்டு நம்மக்களுக்கும் எம் நாட்டுக்கும் அளப்பரிய சேவை செய்துள்ளேன். எவரெவர் எதைச் சொன்னாலும் எனக்கென்று ஒரு கொள்கை உண்டு.

காந்தியத்திலும் அகிம்சையிலும் பூரண நம்பிக்கை வைத்துள்ளவன். நான் எதுவித தவறுகளும் என்றும் யாருக்கும் தெரிந்து செய்தவன் அல்ல. எல்லா தமிழ் அமைப்புக்களையும் ஒன்று சேர்ந்து என்னுடன் எம் இனத்திற்காக உழைக்க வாருங்கள் என்று கடந்த பல ஆண்டுகளாக மிகப்பணிவாக கேட்டு வந்துள்ளேன்.

எம் இனத்திற்காக ஒற்றுமை விரும்பி இவ்வழைப்பு விடும் தகுதியும் உரிமையும் என்னிலும் பார்க்க கூடுதலாக எவருக்கும் இருக்க முடியாது.
ஒற்றுமையே பலம் என்பதனை நிரூபியுங்கள்
சரியான தலைமையை தேர்ந்தெடுங்கள்

காலத்திற்கு காலம் மக்களின் முக்கிய தேவைகளை புரிந்துகொள்ளாத தலைவர்களின் செயற்பாட்டில் மீண்டெழ முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் எம்மை தேடிவந்த தீர்வுகளை தவறவிட்டோம். மிக முக்கியமானதும் அநேகருக்கும் ஏற்புடையதுமான ஒரு தீர்வினை, விடுதலைப்புலிகளின் நன் மதிப்பைப் பெற்றிருந்த ஊடகவியலாளர் தராக்கி உட்பட மட்டக்களப்பு தமிழர் மறுமலர்;ச்சிக் கழகத்துடன் இணைந்து பல அமைப்புக்கள் உருவாக்கிய தீர்வுக்கான ஆலோசனை, பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விடுதலைப்புலிகள் ஆயுதங்களையே கைவிட தயாராக உள்ளதனையும் மறைமகமாக வெளிப்படுத்தியது.

இத்திட்டமானது பெருமளவில் தமிழ் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் உட்பட 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு எடுத்த முடிவு பலராலும் வரவேற்கப்பட்டு, அத்தேர்தலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே கொள்கையுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாலோசனையை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவோம், என அடம்பிடித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்கட்சியும் இறுதி நேரத்தில் ஏற்றுக் கொண்டது.

இதனை தராக்கி சிவராம் அவர்கள் 11.02.2004ம் ஆண்டு வெளியாகிய தேசிய ஆங்கில தினசரி ஒன்றில் எழுதிய கட்டுரை மூலம் தெளிவு படுத்தியுள்ளார். வடகிழக்கிலுள்ள சகல பிரிவினரும் மிக்க ஆவலுடன் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட தீர்வினை, கிளிநொச்சி மட்டும் மௌனம் சாதித்த தென்றும் வருத்தம் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் எல்லா மட்டத்திலும் இவ் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, இரு தமிழ் தலைவர்கள், வேறு சதித்திட்டத்தில் அதற்கு மாறாக செயற்பட்டமைகிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் மனநிலையை குழப்பி பெரும் இழப்புக்களை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. அதன் விளைவாகபல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள், ஆயிரக்கணக்கிலான போராளிகள் உயிரிழந்தும் வலுவிழந்ததுடன், பல நூறு கோடி பெறுமதியான கட்டிடங்கள் ஏனைய பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் வாழ இடவசதியின்றி பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவிக்க நேரிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக வீரம் செறிந்த அமைப்பின் தலைவர்களையும் இழக்க நேரிட்டது. அத்தனைக்கும் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டிய வர்கள் மேற்கூறப்பட்ட தலைவர்களாகிய திரு. மாவை சேனாதிராசா, கண் மூடித்தனமாக அவருக்கு உதவிய திரு. இரா.சம்பந்தன் அவர்களுமே

2004ம் ஆண்டு முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தம் 2009ம் ஆண்டு வரைக்கும் நீடிக்கப்பட்டதற்கும் அதனால் ஏற்பட்ட சகல துன்பங்களுக்கும் பொறுப்பாக இருந்துவிட்டு, இவ்இருவரும் இன்று மார்பு தட்டி நிற்பது கேலிக்குரிய விடயமாகும்.

விடுதலைப்புலிகளின் கனவு நிறைவேறியிருந்தாலோ அல்லது புத்தி சாதுரியமாக இவ் இருதலைவர்களும் செயற்;பட்டிருந்தாலோ 2004ம்ஆண்டு தேர்தலில் சகல தமிழ் அரசியல் கட்சி வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெருவெற்றி பெற்றிருப்பார்கள.; போரும்நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். பல மரணங்கள் தவிர்க்கப்பட்டு தமிழர்களின் கௌரவமும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

எப்படி    இருந்தாலும் இன்னும் காலம் கடந்து விடவில்லை. நாட்டின் நலனுக்காகவும், மக்களின் அரசியல் தீர்வு, பொருளாதார, நலனுக்காகவும் , எமது எதிர்கால இளம் சந்ததியினர் நிம்மதியாக வாழக்கூடிய வகையிலும் ஒரு தலைமையின் கீழ் இயங்கினால் எமது ஒற்றுமையை உணர்ந்து, பேரினவாத அரசாங்கம் எமக்குரிய அரசியல் உரிமைகளை தயங்காமல் தருவதற்கு நடவடிக்கை எடுக்க, உலகநாடுகளும் உந்து சக்தியாக இருக்கும் எனக்கூறி கொள்ள விரும்புகின்றேன்.
அன்புடன் ஆனந்தசங்கரி கிளிநொச்சி (05.02.2018)

ஒவ்வொரு தமிழ் தலைவர்களும் தங்கள் மனச்சாட்சிக்குட்பட்டு செயல்படுத்துமாறு மிகப்பணிவாக கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ் கட்சிகள் மூலை முடுக்களில் இருந்து கொண்டு ஒழிந்து விளையாட முடியாது. 11.02.2004ல் ஓர் ஆங்கில தினசரியில் வெளியாகிய கட்டுரையில,; மறைத்து வைக்கப்பட்டிருந்த பல உண்மைகளை கண்ணியமான ஊடகவியலாளரான தாராக்கி சிவராம் அவர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு தமிழ் மகனும் படிக்க வேண்டிய அக்கட்டுரையின் தமிழாக்கத்தின் ஒருபகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமரர்களான தந்தை செல்வநாயகம், ஜி.ஜீ பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொன்டமான், ஆகிய தலைவர்களால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட இன்றுவரை அவர்களின் கௌரவததிற்கும் பங்கம் ஏற்படுத்தாது தமிழர் விடுதலைக் கூட்டணியினை பாதுகாத்து தந்துள்ளேன். எனவே உதயசூரியன் சின்னத்துக்கே வாக்களித்து புதுயுகத்தை உருவாக்க அணிதிரளுமாறு அனைத்து மக்களையும் தமிழ்கட்சிகளையும் அன்புடன அழைக்கின்றேன.;

டெய்லி மிரர்-11-02-2004

தமிழர் கட்சிகள் மூலை முடுக்குகளில் இருந்து ஒழித்த விளையாட முடியாது- தராக்கி (சிவராம்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் எப்படியோ, அதிலும் பாரக்க கூடுதலாக மிகைப்படுத்தியே காட்டப்பட்டுகிறது. பலவிதமான பிற அழுத்தங்கள் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் அது ஆரம்பத்திலேயே உள்ளுக்குள்ளேயே வலுவிழந்து அற்றுப் போயிருக்கும்.

விடுதலைப் புலிகளாலே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழிநடத்தப்படுகின்றது. என்ற பெரும் மாயைக்கு முரணாக, சில முன்னணி தமிழ் அரசியல்வாதிகளே, மனசாட்சிக்க விரோதமாக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

அவர்களே மனசாட்சிக்கு விரோதமாக, தங்களின் அரசியல் இலாபம் கருதி, புத்திசாலித்தனமான முறையில் புலிகளின் பெயரை பயன்படுத்துகிறார்கள். என்னை கேட்டால் அவர்களில் சிலர் தமிழ் மக்களுடைய போராட்டங்கள் , அபிலாசைகள் ஆகியவற்றில் எவ்வித அக்கறையும் இல்லாதவர்கள் என்றே கூறுவேன்.

அக்கறை இருந்தால் கடந்தவாரம் தெல்லிப்பளை நடந்த, சாகும்வரையிலான, உண்ணாவிரதப் போராட்டத்தில். திருவாளர்கள் மாவை சேனாதிராஜா அல்லது எம்.கே.சிவாஜிலிங்கம் அல்லது அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரின் நிழலைக் கூட காணமுடியவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி சமாதானத்திற்கு விரோதமானவர், என படம்பிடித்துக்காட்டுவது பெரும் பிழையான விடயமாகும். குறைந்த பட்சம் இந்த மனிதர் தனது சிந்தனையில் உதிப்பதையேனும் வெளிப்படுத்துகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயர்கூட, தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு என்று அழைக்க விரும்பிய தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் விருப்புக்கு மாறாக ஊடகங்களால் திணிக்கப்பட்டதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயர்கூட, தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு என்று அழைக்க விரும்பிய தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் விருப்புக்க மாறாக ஊடகங்களால் திணிக்கப்பட்டதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கப்படும் முக்கியத்துவம் அது விடுதலைப் புலிகளின் அரசியல் அதிகாரமென்று கருதுவதும்கூட உண்மைக்கு மாறானதாகும்.

2001 அக்டோபர் -நவம்பர் காலங்களில் இந்த கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை மேலோட்டமாக பார்போமேயானால் இது சம்மந்தமான உண்மைகள் புலப்படும்.

வடக்கு கிழக்கில் ஆர்வமுடன் செயற்படும் குழுக்கள் குறிப்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி கழகம் 2001 டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவித்தவுடன் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பிரசாரத்தில் ஈடுபட்டன.

வடகிழக்கில் இவ்வாறு ஆதரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன தங்களிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளையும் மறந்து, நீண்டகாலம் இராணுவத்துடன் தொடர்புகள் கொண்டிருந்ததையும். உரிமை மீறல் நடவடிக்ககைளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களையும்,
பொருட்படுத்தாது ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே.
யுத்தகாலத்தில் தான் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தவரென கூறும்ஈ தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தருடன் இந்த விடயம் ஆராயப்பட்டபோது , ரெலோஃ ஈ.பி.எல்.எப் ஆகியவற்றை இணைப்பதை மிக வன்மையாக எதிர்த்தார்.

தமிழ் தேசிய குடையின் கீழ் இவ்விரு இயக்கங்களும் இணைவதை விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக எதிர்க்கின்ற காரணத்தை கூறி இதனை நிராகரித்து விட்டார்.

மேலும், அந்தநேரம், தழிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதி, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலேசகர் அன்ரன் பாலசிங்கத்துடனும், நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் அடிக்கடி கூறிவந்தார்.

எப்படி இருப்பினும் இந்த அரசியல் பொய்யே கூறி வந்துள்ளமை பின்பு தெரியவந்தது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு, பொதுவான ஒரே சின்னத்திலும், பொது கொள்கையின் அடிப்படையிலும் போட்டியிடவேண்டும். என்பது தேசியவாத குழுக்களினதும் , பெரும்பாலானவர்களினதும் ஒன்றுபட்ட கருத்தாகும்.

இந்த அபிப்பிரயாயம், திங்கட் கிழமை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் தேசியகூட்டமைப்பின் கிளைக்கூட்டத்தில் ,ஏகமனதாக எடுத்த முடிவில் பிரதிபலித்தது. இதுதான் விடுதலைப்புலிகளின் முடிவும் ஆகும். (இந்த விடயத்தில் கிளிநொச்சி மௌனம் சாதித்தது)

விடும், என்ற அம்சம் காரணமாகவும் இருக்கலாம் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் அரசியல் இணைப்பால் உருவானது, தமிழர் விடுதலைக்கூட்டணி என்பதை நாம் மறக்க முடியாது. 1976 ஆண்டு தமிழ் கட்சிகள், இன ஒற்றுமை காரணமாக தமது தனித்துவத்தை கைவிட வேண்டுமென்று கேட்கப்பட்டன.

தமிழரசு கட்சி தனது நீண்டகால பாவனையில் இருந்த ‘வீடு’ சின்னத்தை கைவிட்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தால் உருவாகிய ,தமிழ் தேசிய ஒற்றுமையின் காரணமாக, தீர்மானிக்கப்பட்ட ‘உதசூரியன்’; பெரும் அமைப்பாக ஒன்றிணைந்து, தமிழர் விடுதலைக்கூட்டணி , என்ற புதிய அரசியல் அடையாளத்தை ஏற்றுக்கொண்டன.

ஆகவே தான் ஒரு காலத்தில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களாக இருந்த மு.சிவசிதம்பரம் , வீ. ஆனந்தசங்கரி போன்ற தலைவர்கள் ஏற்கனவே இருந்த அரசியல் அடையாளத்தை கைவிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியை தமது புதிய அரசியல் அடையாளமாக ஏற்றுக்கொண்டனர். இன்று தமிழரசு கட்சி பெயரில் வெறும் பேப்பரில் மட்டும்தான் இருக்கின்றது.

ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இ;ன்றும் தமது அடையாளத்தை நிலைநாட்ட வற்புறுத்தி வருவதோடு தேவைக்கேற்ப தமது கருத்துக்களை முன்வைப்பதற்காக உபயோகிக்கின்றது.
தமிழ் தேசிய சக்கரம் ஒரு முழு வட்டத்தை சுற்றி வந்துள்ளது. தமி;ழ் கட்சிகள் தமது அரசியல் கட்சியின் அடையாளங்களை கைவிட்டு ஒரு கொடியின் கீழ் ஒரே சின்னத்தில் ஒன்றுபட வேண்டும் என வலிந்து கேட்கப்படுகின்றன.

அவர்கள் 2001மடஆண்டு மார்கழி தொடக்கம் தங்களால் உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு ஒழித்து விளையாட முடியாது

Web Design by Srilanka Muslims Web Team