தமிழ்நாடு சிவமீரா நினைவு தின கவிதைப்போட்டியில் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனுக்கு முதலிடம்! » Sri Lanka Muslim

தமிழ்நாடு சிவமீரா நினைவு தின கவிதைப்போட்டியில் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனுக்கு முதலிடம்!

najmul ain

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

டென்மார்க் சிவமீரா நினைவு அறக்கட்டளை நிலையமும் தமிழ் நாடு வளரி இதழ் நிறுவகமும் இணைந்து நடாத்திய சிவமீரா நினைவு கவிதைப் போட்டியின் பரிசில் வழங்கும் நிகழ்வும் யாழ். வடமராட்சியைச் சேர்ந்தவரும் கடந்த 21 வருடங்களாக டென்மார்க்கில் வசித்து வருபவருமான நக்கீரன் மகள் (திருமதி சிவனேஸ்வரி) எழுதிய அற்றைத்திங்கள் நூல் வெளியீடும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அமரர் விநோதன் மண்டபத்தில் இலக்கிய புரவலர் ஹாசீம் உமர் முன்னிலையில் நடைபெற்றது

இந்த கவிதைப்போட்டியில் பத்தரமுல்லை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் தனக்குரிய பரிசினையும் நினைவுச்சின்னத்தையும் நக்கீரன் மகள் திருமதி சிவனேஸ்வரியிடமிருந்து பெற்றுக்கொள்வதை படத்தில் காலாம்.

இலக்கிய புரவலர் ஹாசீம் உமர் தமிழ் நாடு வளரி இதழ் அருணா சுந்தரராசன் மேமன் கவி நக்கீரன் மகளின் துணைவர் அ.ரொபர்ட் கெனடி ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.

இந்த போட்டியில் பதுளை திலகவதி இரண்டாவது இடத்தையும் கொழும்பு பாத்திமா நளீரா மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka