தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தலில் டாக்டர் ஹாஜா கே. மஜீத், சையத் அலி அக்பர் வெற்றி » Sri Lanka Muslim

தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தலில் டாக்டர் ஹாஜா கே. மஜீத், சையத் அலி அக்பர் வெற்றி

vakfu

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முத்தவல்லிகளுக் கான தேர்தல் 04.10.2017அன்று சென்னை மண்ணடியிலுள்ள வக்ப் போர்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இரண்டு முத்தவல்லி உறுப்பினருக்கான தேர்தலில் 14 பேர் போட்டியிட்டனர். வாக்குகள் இன்று 05.10.2017 தேர்தல் அதிகாரியும், முன்னாள் சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் முன்னிலையில் எண்ணப்பட்டன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு பெற்ற வேட்பாளர் டாக்டர் ஹாஜா கே. மஜீதும், தமிழ்நாடு உலமா பேரவை, தமிழ்நாடு தர்ஹாக்களின் ஒருங்கிணைப்பு பேரவை ஆதரவுடன் போட்டியிட்ட சையத் அலி அக்பர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மொத்த வாக்காளர்கள் 950 பேர். வாக்கு பதிவானவை 850. சையத் அலி அக்பர் 247 வாக்குகளும், டாக்டர் ஹாஜா கே. மஜீத் 182 வாக்குகளும் பெற்றனர். இவர்கள் இருவரும் வக்பு வாரியத்தில் முத்தவல்லி களுக்கான 2 உறுப்பினர் பதவிகளை கைப்பற்றினர்.

வெற்றி பெற்றவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித்தலை வருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, மாநில மின்னணு ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர்கள் மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், கோம்பை நிஜாமுதீன், முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளர் அபூபாரிஸ், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நூருல்லா, விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம்ஷா உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டாக்டர் அப்ரோஸ் பாஷா, சையத் யாகூப், ஷகீல் அஹமது, தாசுதீன், பாபுசேட் உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்ற சையத்அலி அக்பருக்கு சால்வை அணிவித்து வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka