தமிழ்,முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு - Sri Lanka Muslim

தமிழ்,முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

Contributors
author image

டீன் பைரூஸ்

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான தாஜூல் மில்லத் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.MA/MP இனால் கொக்கட்டிச்சோலை,பாலமுனை,  காத்தான்குடியைச் சேர்ந்த ஒன்பது தமிழ்,முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கல்விசார் சிற்றுாழியா் சேவைக்கான நிரந்தர நியமணம் வழங்கும் நிகழ்வு (06.09.2014 சனிக்கிழமை) பிரதியமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தினில் நடை பெற்றது.

 

இந்நிகழ்வினில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் Eng,காத்தான்குடி நகரசபையின் பிரதி நகர முதல்வர் எம். ஜெசீம்JP, கெளரவ  நகர சபை உறுப்பனர்களான அல்ஹாஜ் HMM பாக்கீர் BA/JP ,அல்ஹாஜ் SM சியாட் JP, பிரதியமைச்சரின் செயலாளர் எம்.றிஸ்வின், இனைப்பாளர் எம் நாசர், அஷ்செய்ஹ் எம்.மும்தாஸ்(மதனி) BA, பிரதே கல்வி அதிகாரி அல்ஹாஜ் எம்.பதுர்தீன்(DEO) அதிபர்களான  எம்.எம்.கலாவுதீன் BA. எம்.சத்தார் BA. எம். கயறுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் Eng, உரையாற்றும் போது கெளரவ பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்ப மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான தாஜூல் மில்லத் கெளரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.MA/MP அவர்களுடைய பணிப்புகளுக்கு அமைய எந்த ஒரு எதிர்பார்புகளுமின்றி இன்று இவ்வாறான நியமனம் எங்களால் வழங்கப்படுவதினை இட்டு  நாம் சந்தோசப்படுகின்றோம் அல்லாவுக்கு நன்றி செலுத்துகின்றோம் எனத் தெரிவித்தார்.

 

பிரதியமைச்சர் கெளரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.MA/MP உரையாற்றுகையில் அதி உத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடைய சிந்தனைகளுக்கு அமைய எங்களது  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் அவர்களுடைய சிபாரிசில் இன்று இவ்வாறான நிரந்தர நியமனங்களை தமிழ்,முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுவதினை இட்டு நாம் மகிழ்சியடைகின்றோம். இவ்வாறான நியமனங்களை பெறும் நீங்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்துக்கு விசுவாசத்தடன் நடந்து கொள்வதுடன் உங்கள் தராதரங்களை இதனுாடக மேலும் கூட்டிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

08

 

09

 

10

 

06

 

07

 

Web Design by Srilanka Muslims Web Team