தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்கவைத்த லொஹான் ரத்வத்தையை பதவி விலகச்சொன்ன மகிந்த..! - Sri Lanka Muslim

தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்கவைத்த லொஹான் ரத்வத்தையை பதவி விலகச்சொன்ன மகிந்த..!

Contributors

கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்கவைத்து அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, சிறிலங்காவின் பிரதமர் சற்று முன்னர் லொஹான் ரத்வத்தையை தொடர்புகொண்டதாக தெரியவருகின்றது.

ரத்வத்தையை தொடர்புகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச,  ரத்வத்தை பதவிவிகவேண்டும் என்ற அழுத்தத்தை வழங்கியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அரசியல் அரங்கில் லொஹான் ரத்வத்தை அடாவடித்தனங்களுக்குப் பெயர் போன ஒரு அரசியல்வாதி.

முன்நாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் புதல்வாரன லொஹான் ரத்தவத்த, 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 10 முஸ்லிம் இளைஞர்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு:

பதவிவிலகினார் லொஹான் ரத்வத்தை

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில், அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு்ள்ளது.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியின் ஊடாக அறிவித்திருந்ததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இச் சம்பவம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந் நிலையில் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு  இத்தாலியில் இருந்து தொலைபேசியின் ஊடாக பிரதமர் அறிவித்திருந்த நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Web Design by Srilanka Muslims Web Team