தமிழ் நாட்டின் நிவாரணம்: காத்தான்குடி பிரதேச பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு! - Sri Lanka Muslim

தமிழ் நாட்டின் நிவாரணம்: காத்தான்குடி பிரதேச பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

Contributors

தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ள 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பனவற்றை, மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் முன்னுரிமையடிப்படையில், மாவட்ட செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், காத்தான்குடி – 165 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்குமான 5000/= கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.

Web Design by Srilanka Muslims Web Team