தமிழ் நாட்டு சகோதரரின் ஜனாஸா மன்னாரில் அடக்கம் - Sri Lanka Muslim

தமிழ் நாட்டு சகோதரரின் ஜனாஸா மன்னாரில் அடக்கம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 04ம் திகதி இலங்கை – இந்திய கடல் எல்லைப் பகுதியிலுள்ள தீடை என அழைக்கப்படும் மணல் மேட்டு பகுதியில் மீட்கப்பட்ட ஆணுடைய ஜனாஸா நேற்று (15) பிற்பகல் மன்னாரில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் அதிகாரி முன்னிலையில் பொலிசாரின் கண்காணிப்பில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த ஜனாஸா கடந்த 04ம் திகதி தீடை எனப்படும் மண் திட்டியில் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சடலத்திற்குரிய நபர் தமிழகத்தை சேர்ந்த ஷாகீர் ஹுஸைன் என அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த சடலத்தை தமிழகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் தமிழகத்திற்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனை அடுத்து சடலத்தை இஸ்லாமிய முறைப்படி மன்னாரில் அடக்கம் செய்ய இந்திய தூதரகம் முடிவு செய்திருந்தது.

இதன்படி நேற்று (15) மாலை 4:30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து ஜனாஸா அடக்கத்திற்காக எடுத்து செல்லப்பட்டு மன்னார் உப்புக்குளம் ஜூம்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சடங்குகளுக்கு பின் உப்புகுளம் மையவாடியில் 530 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 28ம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற 04 தமிழக மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த உடலம் கடந்த 04 ம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(நன்றி இணையம்)

Web Design by Srilanka Muslims Web Team