தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளுடன் வெற்றியீட்டும் ஜனாதிபதி வேட்பாளராக பசில்..! - Sri Lanka Muslim

தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளுடன் வெற்றியீட்டும் ஜனாதிபதி வேட்பாளராக பசில்..!

Contributors

தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ச திகழ்கின்றார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று -10-  நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த வாக்குகளின் மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்ற காரணத்தினால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரை களமிறக்குவது குறித்து ஆளும் கட்சியில் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஆளும் கட்சியில் பசில் ராஜபக்ச மற்றும் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை விரட்ட வேண்டுமென ஒரு தரப்பு கூறி வருகின்றது.”

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறுகின்றார் தாம் தோல்வியடையவில்லை என்று.” “அண்மையில் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கச் சென்றுள்ளனர்.”

“மஹிந்தவை மொட்டு கட்சியின் தலைவராக்கி, மொட்டு கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டுமென விமல் தரப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.”

“எனக்கு அரசியல் செய்ய முடியாது நீங்கள் அரசியல் செய்து கொள்ளுங்கள், நான் அடுத்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கோட்டாபய” கூறியுள்ளார்.

“அப்பேது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதனை இப்போது சொல்ல வேண்டாம் அப்படி சொன்னால் எங்களால் அரசியல் நடாத்த முடியாது என கூறியுள்ளார்.”

“சிங்கள பௌத்த வாக்குளினால் நாம் வெற்றியீட்டினோம், எனினும் அடுத்த தடவை தமிழ் முஸ்லிம் சிறுபான்மை வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும் வேட்பாளர் ஒருவரே வெற்றியீட்டுவார் என கோட்டபாய கருதுகின்றார்,

அவ்வாறான வேட்பாளர் வேறு யாருமல்ல அது பசில் ராஜபக்சவே” என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team