(தம்பலகாமம்) விபத்தில் அப்துல் லெத்திப் பலி » Sri Lanka Muslim

(தம்பலகாமம்) விபத்தில் அப்துல் லெத்திப் பலி

janaza

Contributors
author image

எப்.முபாரக்

தம்பலகாமம், குளக்கோட்டன் வித்தியாலத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 53 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

பாலம்போட்டாறு, முத்து நகரை சேர்ந்த அப்துல் லெத்திப் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(3)மாலையில் இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமம், கிண்ணியா நோக்கி சென்ற ஜீப் வண்டி, மேற்படி நபர் பயணித்த துவிச்சக்கர வண்டியின் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஜீப்பின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka