தம்புள்ள பள்ளிக்குள் பட்டாசுகள் தான் வெடித்தன ; குண்டு வெடித்ததாக வதந்தி பரப்புகின்றனர்-ஏ.எச்.எம். பௌசி - Sri Lanka Muslim

தம்புள்ள பள்ளிக்குள் பட்டாசுகள் தான் வெடித்தன ; குண்டு வெடித்ததாக வதந்தி பரப்புகின்றனர்-ஏ.எச்.எம். பௌசி

Contributors
author image

Editorial Team

 தம்புள்ளை பள்ளிவாசலில் பட்டாசுகளை வெடிக்க வைத்து சிங்கள – முஸ்லிம் மக்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சி சதி செய்வதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நேற்று தெரிவித்தார்.
 
ஊவாவில் முஸ்லிம்களின் ஆதரவு அரசாங்கத்திற்கே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே சிரேஷ்ட அமைச்சர் பௌசி இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;
 
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு நேற்று நள்ளிரவு வந்த இரு நபர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாரிடம் அவசரமாக கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி பள்ளிக்குள் சென்று பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
 
அவர்கள் வெளியேறியதும் பள்ளிக்குள் பட்டாசுகள் வெடித்துள்ளன.
 
இச்சம்பவத்தை திரிபுபடுத்தி பள்ளிவாசலுக்குள் குண்டு வெடித்ததாக எதிர்க்கட்சியினர் வதந்தியை பரப்பியுள்ளனர்.
 
பள்ளிக்குள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அதனை குண்டு வெடித்ததாக பிரசாரம் செய்து சிங்கள – முஸ்லிம் மக்களிடையேயான நல்லுறவை சீர்குலைத்து நாட்டுக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
 
ஆனால், எவர் எதைச் செய்தாலும் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையே ஆதரிக்கின்றனர்.
 
ஊவாவில் முஸ்லிம் மக்களின் தேவைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
எனவே, முஸ்லிம்கள் ஊவாவில் அரசாங்கத்தின் வெற்றிக்கு ஒத்துழைப்பார்களென்றும் அமைச்சர் பௌசி தெரிவித்தார். (VK)
 

Web Design by Srilanka Muslims Web Team