தம்புள்ள பள்ளிவாசல் ஒருபோதும் உடைக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு - Sri Lanka Muslim

தம்புள்ள பள்ளிவாசல் ஒருபோதும் உடைக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு

Contributors

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

எக்காரணம் கொண்டும் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டம் 11-10-2013 பாராளுமன்றக் கட்டடிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

மேற்படிக் கலந்தரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, பொலிஸ்மா அதிபர். இராணுவத் தளபதி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

மேற்படிக் கலந்துரையாடலின்போது தம்புள்ளையில் வாழும் 42 குடும்பங்களுக்கு தம்புள்ளையில் வேறு இடத்தில் வீடுகள் வழங்கவும் அவர்களின் கோயிலுக்குப் பதிலாக தம்புள்ளை நகரப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் அதனை அமைக்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது

இதேவேளை தம்புள்ளையில் உள்ள பள்ளிவாசலின் ஒரு பகுதி வீதி அபிவிருத்தி செய்யப்படும் பகுதியில்  அடங்குவதால்  அதனை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றபோதிலும் அதனை அகற்றுவதில்லை என ஜனாதிபதி உறுதியாக அணைவருக்கும் தெரிவித்தாகவும் பாருமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

இதனையிட்டு தான் ஜனாதிபதிக்கு விசேஷடாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஹூனைஸ் எம்பி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team