தம்மிக்கவை எம்.பி.யாக நியமிக்கக் கூடாது; உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு! - Sri Lanka Muslim

தம்மிக்கவை எம்.பி.யாக நியமிக்கக் கூடாது; உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு!

Contributors

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படுவதை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் (CPA) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

அரசியலமைப்பின் 99A பிரிவுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட வேட்புமனுக்கள் அல்லது தேசியப் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்ப அந்நபர் பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவர் ஆவார் .

எனினும் கடந்த 2020 தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பட்டியலிலும் எந்தவொரு தேர்தல் மாவட்டத்தின் நியமனப் பத்திரத்திலும் தம்மிக்க பெரேராவின் பெயர் இல்லை என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தம்மிக்க பெரேராவின் நியமனம் சட்டவிரோதமானது, நியாயமற்றது, சட்டத்திற்கு முரணானது என்றும்மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team