தரம் குறைந்த தலைக்கவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் 15 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு - Sri Lanka Muslim

தரம் குறைந்த தலைக்கவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் 15 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

Contributors

இரத்தினபுரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் சாரதிகளின் பாதுகாப்பு கருதி அணியும் தரம் குறைந்த தலைக்கவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் 15 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் இரத்தினபுரி மாவட்டப் பிரதம அதிகாரி உதய நாமல்கம தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை தரப்படுத்தல் நிறுவனத்தின் தரச்சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொகுபோதாகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2019 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 6149 பயங்கர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1695 பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும்.

2019 ஆம் ஆண்டில் இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மொத்த விபத்துக்களின் எண்ணிக்கை 2016 ஆகும் இவற்றில் அதிகமானவை மோட்டார்சைக்கிள் விபத்துக்களாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Web Design by Srilanka Muslims Web Team