தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்! » Sri Lanka Muslim

தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்!

ba

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


சர்வதேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை இதுவே வரலாற்றின் முதல் தடவையாகும்.

பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்தையும், 88 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 8வது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி 79 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.

பங்களாதேஷ் அணி முதன் முறையாக 6வது இடத்துடன் சம்பின்ஸ் கிண்ணத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தரவரிசை பட்டியலில் தென்னாபிரிக்க அணி முதலிடத்தில் உள்ளதுடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ba

Web Design by The Design Lanka