தற்கொலையா?கொலையா? என்ற முடிச்சை அவிழ்ப்பதுதான் டயகம யுவதியின் மரணத்திலுள்ள முதல் புதிர்..! - Sri Lanka Muslim

தற்கொலையா?கொலையா? என்ற முடிச்சை அவிழ்ப்பதுதான் டயகம யுவதியின் மரணத்திலுள்ள முதல் புதிர்..!

Contributors


புதிரை அவிழ்ப்பதற்கு
மரணித்த யுவதியின் இறுதித்தருண வாக்குமூலம், கௌரவ ரிஷாத் பதியுத்தீன் வீட்டு CCTV பதிவுகள் மிக முக்கியமான தடயங்கள்.
இவை இரண்டையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று நீதிவான் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மட்டுமல்ல,
மரணித்த யுவதிக்கு தங்குவதற்காக கொடுக்கப்பட்டிருந்த அறையை அறையென்றே கூறமுடியாத அளவு எந்த அடிப்படை வசதிகளுமற்ற இருட்டு என நீதவானுக்கு எத்திவைத்தார்கள்.

அதன் உண்மை நிலை இன்று எல்லோர்க்கும் தெரிந்து விட்டது.

இதுபோல்தான் இறுதி வாக்குமூலமும், அழிக்கப்பட்டாக சித்தரிக்கப்படும் CCTV பதிவுகளும் விரைவில் வெளியாகும்.
இவை இரண்டும் ரிஷாதுக்கும் அவர் குடும்பத்துக்கும் மிக அவசியமானவை.

ஆறு CCTV கமராக்களின் பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தால் அதை மீட்டெடுப்பது இந்த காலத்தில் பெரும் வித்தையல்ல.

தவிரவும்,
டயகம யுவதியை தாமதமாகவே வைத்திய சாலையில் அனுமதித்ததாக குற்றம் காணும் அதே வேளை அவசரமாய் அனுமதிப்பதற்காக 18 வயது என்று கூறியதையும் பெரும் குற்றமாக காட்டுகின்றார்கள்.

சொந்த வாகனத்தில் ஏற்றிச் செல்வதால் ஏற்படப்போகும் சர்ச்சையை தவிர்ப்பதற்காக அம்புயூலன்ஸை அழைத்து தாமதித்ததையும் குற்றமாக காட்டுகின்றார்கள்.

குற்றுயிரில் இருப்போரை பொதுவாகவே அம்புலன்ஸின் கொண்டுபோவதைத்தான் யாரும் விரும்புவார்கள்.
அம்புயூலன்ஸில்தான் முதலுதவி சிகிச்சை வசதிகள் இருக்கும்.
தாதிமார் இருப்பார்கள்.

தீக்காயத்துக்குள்ளான ஒருவரை சொந்த வாகனத்தில் ஏற்றிச்செல்லும் நேரம் தற்செயலாக மரணம் நேர்ந்தால் எப்படி, யார் பதில் சொல்வது?
அதுவும் வீட்டில் பணியாளாயிராயிருக்கும் போது தீ காயங்களுக்கு உள்ளான பணிப்பெண்ணின் விடையத்தில் மிகவும் கவனமாகத்தான் இருப்பார்கள்

இங்கு கண்டு பிடிக்க வேண்டிய விடையம் என்னவென்றால் சம்பவத்தை கண்டு எவ்வளவு நேரத்துக்குள் அம்புயூலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது?
எவ்வளவு நேரத்தின் பின் அம்புயூலன்ஸ் வந்தது? என்பவற்றைத்தானேதவிர சொந்த வாகனத்தில் ஏன் கொண்டு போகவில்லை என்பதையல்ல.

மிகச்சரியான அணுகுமுறைகளை குற்றங்களாக காட்ட முனைவது இந்த விசாரனை எதனை நோக்கி செல்கின்றது என்பதை புரிந்துகொள்ளப் போதுமானது.

மிக முக்கியமாக கண்டறியப்படவேண்டிய உண்மை எதுவென்றால் பத்து நாள்களுக்கு மேல் வைத்திய சாலையில் உயிருடன் இருந்த யுவதி ஒரு வார்த்தையேனும் பேசவில்லையா?
வைத்தியசாலையில் கடமையிலிருந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும்

தன் மகள் வைத்தியசாலையில் பேசவே இல்லை என்ற தாயின் கூற்றை நம்பத்தேவையில்லை.
வைத்தியசாலையிலுள்ள CCTV பதிவுகளை ஆராய வேண்டும்

இறுதியாக
ரிஷாதின் குடும்பத்துக்கு பிணை வழங்கினால் மக்கள் ஜீரணிக்கமாட்டார்கள் என்று கூறியே பிணையை தடுத்துள்ளார்கள்.

மேல் நீதிமன்றங்கள் மக்களின் ஜீரணிப்பு, அஜீரணங்களை கவனித்தில் கொள்ளுமா
நீதியை சொல்லுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்

-அரசியன்-

Web Design by Srilanka Muslims Web Team