தலதா மாளிகை கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் அரசாங்கம் விற்பனை செய்திருப்பார்கள் - குணவங்ச தேரர்..! - Sri Lanka Muslim

தலதா மாளிகை கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் அரசாங்கம் விற்பனை செய்திருப்பார்கள் – குணவங்ச தேரர்..!

Contributors

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கட்டடம் உள்ளிட்ட  பல கட்டடங்களை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவித்த எல்லே குணவங்ச தேரர்,  நல்லவேளை, தலதா மாளிகை கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்பனை செய்திருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

எல்லே குணவங்ச தேரர் தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆட்சி அமைக்கக் கொண்டுவரப்பட்ட இந்த அரசாங்கம், தற்போது நாட்டு மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது. நாட்டின் சுபீட்சத்துக்காகவே அரசாங்கம் செயற்படுவதாகக் கூறிக்கொண்டாலும், அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கம் பாரியளவில் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும், நல்லவேளை தலதா மாளிகை கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்பனை செய்திருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்காக நாடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team