தலைமைத்துவச் சபைக்கு 9 பேர் நியமனம் - சஜித் பிரேமதாஸ வாபஸ் - Sri Lanka Muslim

தலைமைத்துவச் சபைக்கு 9 பேர் நியமனம் – சஜித் பிரேமதாஸ வாபஸ்

Contributors

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் தலைமைத்துவச் சபைக்கு ஒன்பதுபேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தேசிய தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சபைக்கு ஆறு உறுப்பினர்கள் செயற்குழுவினால் நியமிக்கப்பட்டதுடன் மூவர் பதவிநிலை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ,ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல,தலதா அத்துகோறளை மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவிநிலை உறுப்பினர்களாக காமினி ஜயவிக்ரம பெரேரா, மங்கள சமரவீர மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தலைமைத்துவச் சபைக்கு பிரேரிக்கப்பட்ட தனது பெயரை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.tm

Web Design by Srilanka Muslims Web Team