தலைமைத்துவ பயிற்சியின் ஐந்தாம் கட்ட நடவடிக்கைகள் நேற்று ஆரம்பம்! - Sri Lanka Muslim

தலைமைத்துவ பயிற்சியின் ஐந்தாம் கட்ட நடவடிக்கைகள் நேற்று ஆரம்பம்!

Contributors
author image

Editorial Team

பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் ஐந்தாம் கட்ட நடவடிக்கைகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
 
கன்னெருவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் பயிற்சி பாடசலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
 
பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக 30 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக  அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
 
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாயக்க, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,  உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team