தலைவனை சிறை மீட்க சமூகமாக அணிவகுப்போம்!அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணி துண்டுப்பிரசுரம் வெளியீடு..! - Sri Lanka Muslim

தலைவனை சிறை மீட்க சமூகமாக அணிவகுப்போம்!அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணி துண்டுப்பிரசுரம் வெளியீடு..!

Contributors

வேறுபாடுகளைக் கடந்து, மக்களின் தலைமையாக அடையாளங்காணப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சிறைமீண்டு, பணிதொடர அனைவரையும் பிரார்த்திக்குமாறு சமூக உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சகலருடனும் நெருக்கமாகப் பழகிய மக்கள் தலைவன் ரிஷாட், ஆதரவாளர்களுடன் அன்பாகவும், அதிகாரிகளுடன் அந்நியோன்யமாகவும் பழகியதால், அனைவரையும் வசீகரித்துக்கொண்டார் இவர். இந்த வீரத்தலைமையின், விடுதலையைத்தான் சகல சமூகங்களும் இன்று வேண்டி நிற்கின்றன.

வேற்றுமைவாதம் இல்லாதொழிந்து, தேசியவாதத்தை விதைக்கும் வகையிலான சேவைகளையே இந்த ரிஷாட் முன்னெடுத்திருந்தார். இதனால்தான், வன்னியில் மாந்தை மேற்கு, முல்லைத்தீவில் மாந்தை கிழக்கு பிரதேச சபைகளை இவரால் வெல்லக் கிடைத்தது. மட்டுமல்ல சிங்கள சகோதரர்களின், அபிமானத்தையும் இந்த ரிஷாட் வென்றிருக்கிறார்.

அவருக்காக எழும் சிங்களக் குரல்களும், அவரின் விடுதலைக்காக அழும் சிங்களத் தாய்மார்களும்தான் இதற்கான ஆதாரங்கள். இவரைத் தடுத்து வைத்துள்ளதால் ஆட்சியாளர்கள் அடையப்பார்ப்பது எதனை? இந்தச் சலசலப்புக்கள் சமூக விசுவாசிகளை உசுப்பேற்றுவதை, சமூக உணர்வாளர்கள் உணர்ந்துவருகின்றனர்.

புனித நோன்புகாலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் தலைவன் ரிஷாட், செய்த பாவம்தான் என்ன? “அரசே, அநியாயமாக அடைக்கப்பட்டுள்ள எங்கள் தலைவனின் விடுதலையைத் துரிதப்படுத்து. தேவையேற்படின், அடிக்கடி அழைத்து விசாரணை செய்” சகல சமூகங்களதும் இன்றைய ஆதங்கங்கள்தான் இவை. இந்த ஆதங்கங்கள் அணிதிரண்டு, நீதியை நாடும் பயணம் விரைவில் ஆரம்பமாவதற்கு முன்னர், அரசாங்கம் ஆறுதலான பதிலளிப்பதையே அப்பாவிச் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன.

நாட்பட்டால் நாடு முழுவதும் நடைபவனிகளைத் தடுக்க முடியாமல் போகும் என்பதுதான் சமூக உணர்வாளர்களின் கவலையாக உள்ளது. வாரத்தில் மூன்று மணித்தியாலங்கள்தான் விசாரணை நடத்துவது என்றால், மாதக்கணக்கில் நமது தலைவன் ஏன் மறைத்து வைக்கப்பட வேண்டும்?

நீதியை நம்பியுள்ள நமது மக்களும் நீதிமன்ற விசாரணைகளையே நாடுகின்றனர். “அரசே! எமது தலைவனை விசாரணை செய், அல்லது விடுதலை செய்”. இவைகள்தான் இனி ஓங்கி ஒலிக்கப் போகின்றன. சாத்வீக வழிகள் வீரியம் இழந்ததாக வரலாறும் இல்லை.

வெளியீடு:-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணி

Web Design by Srilanka Muslims Web Team