தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் நினைவேந்தல் நிகழ்வும் 14 கோடி ரூபா அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிப்பும் - Sri Lanka Muslim

தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் நினைவேந்தல் நிகழ்வும் 14 கோடி ரூபா அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிப்பும்

Contributors
author image

அஷ்ரப்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 14 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ‘நினைவேந்தல்’ நிகழ்வும், அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை கிராமத்தில் 14 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பதுடன், நிறைவு செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் தேசிய காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளன..

 

இந்த நிகழ்வுகளில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள்,, அரச உயரதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இரு கட்டங்களாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளின் முதற்கட்டமாக பாலமுனை கிராமத்தில் நிறைவு செய்யப்பட்ட அசசயடி வீதி, ஊர்க்கரை வீதி, சின்னப் பாலமுனை காபட் வீதி, ஹூசைனியா நகர் முகப்பு வீதி, மற்றும் ஹிறா நகர் வீடமைப்புத் திட்டம், உதுமாபுற மின்சார திட்டம் மற்றும் ஹிறா நகர் மக்ளுக்கான வாழ்வாதார திட்டம் என்பன மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

 

மேலும் பனையடி விவசாயப்பாதை, வன்னிப்பத்து விவசாயப் பாதை, படாரக்கல் குளம் புனரமைப்பு, ஹிறாநகர் மின்சார திட்டம், மின்ஹாஜ் வித்தியாலய உள்ளக வீதி,அல்-ஹிதாயா வித்தியாலய உள்ளக வீதி என்பன அன்றய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

 

இரண்டாம் கட்ட நிகழ்வாக பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் மறைந்த தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரஃப் அவர்களுக்கான நினைவுவேந்தல் கூட்டம் இடம்பெறவுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team