தலைவர் ரிசாதின் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை - Sri Lanka Muslim

தலைவர் ரிசாதின் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை

Contributors
author image

A.H.M.Boomudeen

 

 

அ.இ.ம.கா வுக்கு கஷ்டப்பட்டு வாக்கு திரட்டிய நாங்கள் இருக்கும் போது வீட்டிற்குள் சொகுசாக இருந்த கட்சியின் செயலாளர் நாயகத்தை எம்பியாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அ.இ.ம.கா சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் ஒருமித்;த நிலையில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

10 வேட்பாளர்களும் ஒருமித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு

ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அ.இ.ம.கா வுக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நியமனத்தை கட்சியின் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீன் புத்தளத்திற்கு வழங்கியமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவருக்குள்ள அதிகாரத்திற்கு அப்பால் குறித்த தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எம்முடனம் அவர் கலந்துரையிருந்தார். எமது இணக்கப்பாட்டுடன் தான் அந்த தேசியப்பட்டியல் நியமனத்தை அவர் புத்தளத்திற்கு வழங்கியிருந்தார்.

கட்சியின் செயலாளர் நாயகத்தை பொறுத்த வரை அவரது பெயர் ஐதேகவின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டதன் பிற்பாடு கட்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மந்தாகவே இருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் முhகவின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தும் அளவுக்கு அ.இ.ம.கா வேட்பாளர்களாகிய நாங்கள் மும்மூரமாகவும் தீவிரமாகவும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு பயந்தும் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில் செயலாளர் நாயகமோ எவ்வித பதற்றமும் இன்றி அமைதியான முறையில் சொகுசாக தேர்தல் காலத்தை கழித்துக்கொண்டிருந்தார்.

தலைவர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது அவரிடம் முகத்தைக் காட்டுவதற்காக அவ்வப்போது வந்து போன செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற எம்மை ஆதரிக்கின்ற கூட்டங்களுக்குக் கூட அவர் வந்து பேசவோ எம்மை ஊக்குவிக்கவோ எமது தேவைகள் குறித்து அறியவோ அவர் எந்தவொரு பங்களிப்பையோ முயற்சியையும் செய்யவில்லை.

ஆகக் குறைந்தது தேர்தல் தினத்தன்று தேர்தல் முடிவு நேரமான பிற்பகல் 04 மணிகூட இந்த மாவட்டத்தில் அவர் இருக்காது கொழும்புக்குச் சென்று பாதுகாப்பாக அவர் அமர்ந்து கொண்டார்.

இவ்வாறு நாங்கள் கஷ்டப்பட்டு 33 ஆயிரம் என்ற பாரிய இலக்கை எட்டி நிக்கும் இத்தருணத்தில் ஒரு துளி வியர்வை கூட சிந்தாத வை.எல்.எஸ் பாராளுமன்றம் செல்வது என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.

எனவே தலைவர் எடுத்திருக்கும் தேசியப்பட்டியல் தொடர்பான தீர்மானத்தில் நாம் அவருக்கு பக்கபலமாக இருப்பதோடு அவரது தலைiயை என்றும் நாம் பலப்படுத்துவோம் என்பதை இந்த ஊடக அறிக்கையின் ஊடாக கட்சிப் போராளிகளுக்கும் கட்சித் தலைமைக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team