தாமரை கோபுர நிர்மாணிப்பிற்காக இலங்கை பெற்ற கடனை தீர்க்க நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட வேண்டும்! - Sri Lanka Muslim

தாமரை கோபுர நிர்மாணிப்பிற்காக இலங்கை பெற்ற கடனை தீர்க்க நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட வேண்டும்!

Contributors

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க, கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அவர்களின் நிலுவை தொகையை தீர்த்துவைக்க மேலும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வேண்டும். ஐந்தாண்டுகளில் தீர்வு காண வேண்டும்,” என்றார்.

“எனவே தாமரை கோபுரம் சித்தரிப்பது ஒரு இருண்ட படம் மாத்திரமே ” என அவர் மேலும் தெரிவித்தார்.

தாமரை கோபுரம் நாட்டிற்கு பெரும் வருவாயை ஈட்டும் ஒரு நல்ல திட்டமாக இருந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team