தாருன் நுஸ்ரா ஆதரவற்றோா் இல்லச் சிறுமிகளுக்கு நீதியையும் பாதுகாப்பையும் கோரி ஆர்ப்பாட்டம் » Sri Lanka Muslim

தாருன் நுஸ்ரா ஆதரவற்றோா் இல்லச் சிறுமிகளுக்கு நீதியையும் பாதுகாப்பையும் கோரி ஆர்ப்பாட்டம்

nusra.jpg2

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

தாருன் நுஸ்ரா ஆதரவற்றோா் இல்லச் சிறுமிகளுக்கு நீதியையும் பாதுகாப்பையும் கோரி இன்று (7) ஆம் திகதி கங்கொட நுகோகொட நீதிமன்றத்திற்கு முன்னால் பல்வேறு அமைப்புக்கள் கவனயீா்ப்பு போரட்டமும் ஆர்பாா்ட்டங்களையும் நடாத்தினாா்கள்.

கொழும்பு களுபோவில இயக்கும் அல் முஸ்லீமாத் ”தாருன் நுஷ்ரா ” ஆதவற்ற சிறுமிகளுக்கான இல்லத்தில் 18 முஸ்லீம் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ன. இவ் அநாதைச் சிறுவா்களுக்கு அரசாங்கம், சிறுவா் பாதுகாப்புப் பொறுப்பான அரச அதிகார நிறுவனங்களிடமும் முன் வைத்து நுகேகொட நிதிமன்றம் முன்பாக இன்று(7) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சாா்பாக சட்டத்தரணி சிறாஸ் நுார் தீன் மற்றும் தொண்டா் அடிப்படையில் சட்டத்தரணிகள் குழு ஆஜராகினர். பொலிஸ் சாா்பில் களுபோவில பொலிஸ் அதிகாரி (IP ) செனவிரத்தின ஆஜாா்கிரானா். இன்று (7) நுகேகொட மஜிஸ்திரேட் இவ் வழக்கினை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இவ் வழக்கு மேலும் ஒருவரின் சாட்சியினை பொலிசாா் பதியப்படல் வேண்டுமெனவும் அவரது வாக்கு மூலத்தினை சமா்ப்பிக்குமாறு ம் இவ் வழக்கு எதிா்வரும் ஜனவரி 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோா்கள் கருத்து தெரிவிக்கையில்

நுகேகொடை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இவ் வழக்கில் உரிய சட்ட மருத்துவ அறிக்கைகள் ஏனைய சான்றுகளையும் சமா்ப்பிப்பதில் அரச அதிகார நிறுவனங்கள் பக்கத்தில் இயல்புக்கு மாறான தாமதம் காணப்படுகின்றது.

இவ் வழக்கின் சந்தேகநபருக்கு பினை வழங்கப்பட்டுளமையை நாம் கவலையுடன் அவதானிக்கிறோம்.

தேசிய சிறுவா் பாதுகாப்பு அதிகார சபை, சி.ஜ.டியினா். மகளிா் மற்றும் சிறுவர்கள் பணியகம், கொஹூவல பொலிஸ் நிலைய குற்றப் புலநாய்வுப் பிரிவு வைத்தியசாலையின் ரி,என் ஏ அறிக்கை – ஆகியன உள்ளடங்களாக அரச அதிகார நிறுவனங்கள் இவ்வழக்கு தொடா்பான எந்த நடவடிக்கையின்போது ஆதரவற்ற பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலனை கருத்திலெடுக்க வேண்டும்..

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டுமன்றி தாருன் நுஸ்ரா முகாமைத்துவம் அரச சிறுவா் நன்னடைத்தை உத்தியோகத்தா்களும் தமது கடமையைச் செய்வதில் தவறியிருப்பதுடன் இம் அநாதைச் சிறுவா்களது மனக்காயம், அனுபவங்கள் உடந்தையாய் இருந்துள்ளாா்கள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரவித்தனா்.

nusra nusra.jpg2

Web Design by The Design Lanka