திக்வெல்லயில் கோர விபத்து: அப்துல்லா, பஷீனா, ஷபீக் வபாத் » Sri Lanka Muslim

திக்வெல்லயில் கோர விபத்து: அப்துல்லா, பஷீனா, ஷபீக் வபாத்

ecc.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, திக்வெல்ல- மாத்தறை வீதியில் பொல்கஹமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், மூவர் பலியாகியுள்ளனர்.

திக்வெல்ல யோனகபுரவைச் சேர்ந்த மொஹமட் அப்துல்லா (வயது 29), திக்வெல்ல தெனிய வீதியைச் சேர்ந்த மொஹமட் பஷீனா (வயது37) மற்றும் திக்வெல்ல முஸ்லிம் வீதியைச் சேர்ந்த மொஹமட் ஷபீக் ஆகிய மூவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இந்த கோரவிபத்து, நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை 6:30க்கு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை பக்கமாக பயணித்த, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸூம் எதிரே பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்வத்தில், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் முச்சக்கரவண்டியின் பின்பக்க ஆசனத்திலிருந்து பயணித்த அறுவருமென, ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், மூவரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ecc

Web Design by The Design Lanka