திடீரென தங்க நிறத்தில் மாறிய நீர்வீழ்ச்சி » Sri Lanka Muslim

திடீரென தங்க நிறத்தில் மாறிய நீர்வீழ்ச்சி

nn

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


தங்க நிறமாக மாறிய நீர்வீழ்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஊவா மாகாணத்திலுள்ள இராவணா எல்ல நீர்வீழ்ச்சியே இவ்வாறு தங்க நிறமாக மாறியுள்ளது.

இலங்கைத் தீவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் திடீரென சேற்று நிறத்தில் காட்சியளிக்கிறது.

ஊவா மாகாணத்தில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அதில் இருந்து வரும் பாரிய அளவிலான நீர் சேற்று நிறத்திலேயே கீழே விழுவதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் தூரத்திற்கு இருந்து பார்க்கும் போது தங்க நிறத்தில், தங்க நீர் வடிவதனை போன்று காணப்படுவதாக அந்தப் பகுதியில் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka