தினகரன் ஆசிரிய பீடத்தில் நடைபெற்ற தைப்பொங்கள் நிகழ்வு! - Sri Lanka Muslim

தினகரன் ஆசிரிய பீடத்தில் நடைபெற்ற தைப்பொங்கள் நிகழ்வு!

Contributors

(அஸ்ரப் ஏ சமத்)
தினகரன் நாளிதழ் ஒரு பதிப்பாகவே வெளிவருகின்றது. பிந்திய பதிப்பை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து அதற்கான வழிவகைகளைச் செய்து கொடுக்கும்படி பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் வேண்டிக்கொண்டார்.

 
நேற்று தினகரன் ஆசிரிய பீடத்தில் அதன் ஆசிரியர் எஸ். தில்லைநாதன் ஏற்பாடு செய்த தைப்பொங்கள் நிகழ்விலேயே மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. லேக் ஹவுஸ் பொதுமுகாமையாளர் அபேவீர மிக விரைவில் தினகரன் பிந்திய பதிப்பினை மீள நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 
இதனால் பிற்பகல் பாராளுமன்ற செய்திகள் ஜனாதிபதியின் செய்திகள் ஆகியன பிந்திய செய்திகள் உடனுக்குடன் வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளியில் வெளிவருகின்றன. ஆனால் தினகரன் ஒரு பதிப்பாக இருப்பதனால் அடுத்த நாளிலேயே பிரசுரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

 

tk1 tk2 tk3 tk4

Web Design by Srilanka Muslims Web Team