தியாவட்டவான் தண்னீர் வறட்ச்சியை பிரதேச சபை உறுபினர் அஸ்மி பார்வையிட்டார் - Sri Lanka Muslim

தியாவட்டவான் தண்னீர் வறட்ச்சியை பிரதேச சபை உறுபினர் அஸ்மி பார்வையிட்டார்

Contributors
author image

Editorial Team

இந்த வருடம் என்றும் இல்லாதவாறு கல்குடா பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய கிராமமான தியாவட்டவான், நாவலடி பிரதேசமானது அன்றாடம் குடிப்பதற்கு கூட தண்னீர் கிடைக்க முடியாத அளவுக்கு கடும் வறட்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற வாழ்வாதாறத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பெறும் பிரச்சனைகளுக்கும், கஸ்டங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்..

 

இந்த நிலையில் தியாசட்டவான் பிரதேச வாழ் முக்கியஸ்தர்களின்  வேண்டு கோள்களுக்கினங்க குறிப்பிட்ட பிரதேசத்துக்கு உடனடி விஜயத்தினை மேற்கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மி அவர்கள் தண்னீர் வறட்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஒன்று கூட்டி கலந்துறையாடல் மூலமாக அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

 

மேலும் தன்னீர் வறட்ச்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும், வீடுகளில் தன்னீர் வறட்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள கிணறுகளையும் பார்வையிட்டதுடன் இந்த தண்னீர் பிரச்சனைக்கான உடனடி தீர்வு பற்றியும் மக்களுடன் கலந்துறையாடியதன் பலனாக வருகின்ற ஓட்டமாவடி பிரதேச சபையின் சபை அமர்வில் இதனை முதன்மை படுத்தப்பட்ட பிரச்சனையாக சமர்பித்து இதற்கான உடனடி தீர்வனை நான் முன்னெடுப்பதாக தியாவட்டவான் பிரதேசத்தில் உள்ள தண்னீர் வறட்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உறுதியளித்தார்.
 

01

 

02

 

03

 

04

Web Design by Srilanka Muslims Web Team