திருகோணமலையில் 24 மணி, நேரத்தில் 5 கொரோனா மரணங்கள்..! - Sri Lanka Muslim

திருகோணமலையில் 24 மணி, நேரத்தில் 5 கொரோனா மரணங்கள்..!

Contributors

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 05 மரணங்கள் கொவிட்19 காரணமாக பதிவாகியுள்ளதாகவும் புதிய தொற்றாளர்களாக 50 இனங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சேவைகள் திணைக்களத்தின் நேற்று(17) காலை 10.00 மணி தொடக்கம் இன்று (18) காலை 10.00 மணி வரையான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில் கிண்ணியா சுகாதார பிரிவில் 20, மூதூர் 15, திருகோணமலை 07, கந்தளாய் 03, குறிஞ்சாக்கேணி 3, உப்புவெளி 2 என்றவாறாக புதிய தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். இம்மாதம் (மே மாதம்) மாத்திரம் தற்போது வரை 795 தொற்றாளர்களுமாக இது வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 2236 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 435 பிசீஆர் மாதிரிகளூம் 373 அன்டிஜன் மாதிரிகளும் பெறப்பட்ட நிலையில் மாவட்டம் முழுதும் 13006 பிசீஆர், 18165 என்டிஜனும் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 24 மணி நேரத்திற்குள் ஐந்து மரணங்கள் பதிவாகிய நிலையில்  42 மரணச் சம்பவங்கள் இது வரைக்கும்  மாவட்டம் முழுதுமாக மொத்தமாக பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேர மரண சம்பவத்தில் திருகோணமலை சுகாதார பிரிவில் 2,கிண்ணியா 3 எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரையான மரண பதிவுகளாக மொத்தமாக திருகோணமலை சுகாதார பிரிவில் 12,கிண்ணியா 10, உப்புவெளி 8, மூதூர் 4, குறிஞ்சாக்கேணி 4, கந்தளாய் 3, குச்சவெளி 1 என புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

Web Design by Srilanka Muslims Web Team