திருகோணமலை போக்குவரத்து சாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது..! - Sri Lanka Muslim

திருகோணமலை போக்குவரத்து சாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது..!

Contributors

 எப்.முபாரக் 

இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட பஸ் சாலைகளை புனரமைத்து விஸ்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை போக்குவரத்து சாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளரின் பணிப்புரைக்கமைய 

இலங்கை போக்குவரத்து சபையின் உதவி மனிதவள முகாமையாளர் எச்.ஆர். சேனாநாயக்க சுமித்(விளையாட்டு மற்றும் நலன்புரி)  இன்று(3) திருகோணமலை போக்குவரத்து சாலைக்குச் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் பஸ் செலுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது இலங்கையிலுள்ள ஒவ்வொரு போக்குவரத்துச் சாலைகளையும் நவீன ரீதியில் புனரமைக்கப்படவுள்ளதுடன்,வீதிகளும் காபட் வீதிகளாக மாற்றப்படவுள்ளது,அத்தோடு புதிய நியமனங்களை வழங்கி சகல உத்தியோகத்தர்களையும் அவர்களில் பிரதேசங்களில் உள்ள பஸ் சாலைகளில் சேவை செய்வதற்கான ஏற்பாடுகள்,மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் இல்லாத போக்குவரத்துச் சாலைகளில் உடனடியாக ஏற்படுத்துவது அத்தோடு விளையாட்டுத் திறமைகள் உள்ள உத்தியோகத்தர்களை தேசிய ரீதியில் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team