திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்பு பெட்டி கண்டு பிடிப்பு..! - Sri Lanka Muslim

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்பு பெட்டி கண்டு பிடிப்பு..!

Contributors
author image

எப்.முபாரக்

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்பு பெட்டி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால் இன்று (5) காலை முதல் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டிருந்தது
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது இன்று காலை முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து  பலத்த பாதுகாப்புடன் குறித்த பெட்டியை திறந்து பார்த்தனர்.
அதனையடுத்து குறித்த படியானது இராணுவ சிப்பாய் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team