திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு..! - Sri Lanka Muslim

திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு..!

Contributors

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமோர் நிகழ்வு  இன்று(9) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


முஸ்லிம் எய்ட் நிறுவனம் 3000 ரூபா பெறுமதியான 250 உலர்உணவுப்பொதிகளை இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்ஜிடம் வழங்கி வைத்தது.


இப்பொதிகள்  யாவும் மேலதிக அரசாங்க அதிபரால்  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரிடம்  உரிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கவென  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதன போது மாவட்ட செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.ஜலாலுடீன், மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்பதிகாரி கே.நிர்மலகாந்தன்,உரிய நிறுவன ஒருங்கிணைப்பதிகாரியும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team