திருகோணமலை  மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்  முன்னெடுப்பு..! - Sri Lanka Muslim

திருகோணமலை  மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்  முன்னெடுப்பு..!

Contributors

எப்.முபாரக் 

திருகோணமலை  மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை  மாவட்டத்தில் ஏற்கனவே இருபதாயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு  சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில்   அரசினால் திருகோணமலை  மாவட்ட மக்களுக்கு வழங்கவென  மேலும்  தடுப்பூசிகள் வழங்கும் திட்டம்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர் மற்றும் திருகோணமலை போன்ற  ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team