திருகோணமலை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்! - Sri Lanka Muslim

திருகோணமலை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

Contributors

திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், திருகோணமலை மாவட்டத்துக்கான கடற்படை பிரதிக் கட்டளைத்தளபதி மஹேஷ் டி சில்வாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

 

நேற்று (16) நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.எல்.எம்.நெளபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீம், வெள்ளைமணல் மீனவர் கூட்டுறவுச்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

ஹஸ்பர்

Web Design by Srilanka Muslims Web Team