திருகோணமலை விபுலாநந்த கல்லூரி முஸ்லிம் மாணவர் பலர் பல்கலைக்கு தெரிவு » Sri Lanka Muslim

திருகோணமலை விபுலாநந்த கல்லூரி முஸ்லிம் மாணவர் பலர் பல்கலைக்கு தெரிவு

vip

Contributors
author image

Hasfar A Haleem

இம் முறை வெளிவந்துள்ள க.பொ.த உ.த 2016 பரீட்சை முடிவுகளின் படி திருகோணமலை விபுலானந்தா கல்லூரி க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஐந்து துறைகளிலும் மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சென்று சாதனை படைத்துள்ளனர்.இந்த வகையில் கடந்த வருடத்தைப் போல் தொழினுட்பப் பிரிவில் த.சஞ்சீவன் 3பி பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மூன்றாவது நிலையை எம்.றிஜாத் ஐந்தாவது நிலையை என்.அஜாஸ் மாவட்ட மட்டத்தில் பத்தாம் இடத்தை ஆர்.பிரதீபன் 13 ம் இடத்தை எம்.முஸாப் 15ம் இடத்தை ஆர்.ரொபின்சன் 17வது இடத்தை ஏ.எல்.எம்.அஸ்லம் 20 வது இடத்தை எம்.அல்தாப் 21ம் இடம் எம்.ரம்ஸான் 27வது இடம் எஸ்.ஜதுர்ஸ்வதன் 28வது எம்.எல்.எ. அஸ்லம் 30வது எஸ்..சஜீவன் ஆகியோர் பெற்றுள்ளார்.

கணிதப் பிரிவில் வி.கோபிசங்கர் 3பி சித்தியை பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.விஞ்ஞானப்பிரிவில் ஏபிசி சித்திகளைப்பெற்று ஜெ.டயஸ் டிலான் மற்றும் 2பிசி சித்திபை; பெற்று ஐ.றெபேக்கா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

வர்த்தகப் பிரிவில் 2ஏபி சித்தியைப் பெற்று சி.கமலினி மற்றும் ஏ2பி சித்தியைப் பெற்று ஜெ.கபிஷன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கலைப்பிரிவில் ஏபிசி சித்தியைப் பெற்று ஏ.ரஸிதா எனும் மாணவியும் நுண்கலை பீடத்திற்கு எஸ்.ஜக்சலா எனும் மாணவியும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த முடிவுகள் தொடர்பாக கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ்.ஜெரோம் அவர்கள் குறிப்பிடுகையில் இம்முறை கிடைத்த உயர்தர பரீட்சை முடிவானது பாடசாலை வரலாற்றில் ஒரு பதிவு என குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka