திருமண புகை படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மணமகள்: விவாகரத்து கோரிய மணமகன் -ஜித்தாவில் சம்பவம் » Sri Lanka Muslim

திருமண புகை படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மணமகள்: விவாகரத்து கோரிய மணமகன் -ஜித்தாவில் சம்பவம்

girl

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் –அக்கரைப்பற்று


திருமணமாகி இரண்டு மணி நேரத்தில் மணமகள் சமூக வலைதளம் பயன்படுத்தியதாக மணமகன் விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரேபியா ஜித்தா நகரில் திருமணமான இரண்டு மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து கோரியுள்ளார். திருமண புகைப்படத்தை மணமகள் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், மணமகன் ஆத்திரமடைந்து இத்தகைய முடிவை எடுத்தார்.

திருமணத்துக்கு முன் மணமகன் பெண் வீட்டாரிடம் ஒரு நிபந்தனை விடுத்தார். அது மணமகள் திருமணத்துக்கு பிறகு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என்பது.

மணமகள் ஆர்வம் மிகுதியால் திருமணம் நடைப்பெற்ற சிறிது நேரத்தில் திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த மணமகன், மணமகள் நிபந்தனையை மீறியதால், தனக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்ளும் பெண்ணுடன் வாழ முடியாது என்று கூறி விவாகரத்து செய்ய போவதாக தெரிவித்தார்.

இதையடுத்து மணமகள் குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது. திருமணமான இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து கோரி அழைப்பு விடுத்த சம்பவம் மணமகள் வீட்டாரை மிகவும் பாதித்துள்ளது.

Web Design by The Design Lanka