திருமண வீட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்திய அமெரிக்க போர்விமானம் - Sri Lanka Muslim

திருமண வீட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்திய அமெரிக்க போர்விமானம்

Contributors

அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று ஏமன் நாட்டில் நடந்த ஒரு திருமண வீட்டில் ஏவுகணையை ஏவியதால் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்த 17 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை ஏமன் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஏமன் நாட்டில் நடக்கும் ஒரு திருமணத்திற்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து இந்த ஏவுகணையை அமெரிக்கா ஏவியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஐந்து அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருந்தாலும், 12 அப்பாவிகள் பலியானதில் ஏமன் கடுங்கோபத்தில் இருக்கிறது. ஏமன் நாட்டில் வெளியுறவுத்துறை செயலக அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து எவ்வித தகவலையும் ஏமன் அரசுக்கு தெரிவிக்காமல் அப்பாவி மக்களை சேர்த்து தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்கு அமெரிக்க அரசு பதில் கூறியே தீரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.இந்த தாக்குதலில் இறந்த யாரும் ஏமன் அரசால் தேடப்படும் குற்றவாளிகள் இல்லை என்றும் அமெரிக்க அரசு அத்துமீறி தாக்குதல் நடத்தியதை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team