திருமலையில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் உயிரிழப்பு! - Sri Lanka Muslim

திருமலையில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் உயிரிழப்பு!

Contributors

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர், இன்று (17) காலை உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், இறக்ககண்டி, வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய துஷ்யந்தன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று இளைஞர்கள் இணைந்து படகில் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் மற்ற இருவரும் உயிர் தப்பியுள்ளனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம், நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team