திருமலை மாவட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! - Sri Lanka Muslim

திருமலை மாவட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

Contributors

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில், திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால், நாளாந்தம் கூலித் தொழில் செய்யும், பொருளாதார ரீதியில் கஷ்டப்படுகின்ற குடும்பங்களுக்கு ஆறாம் கட்டமாக அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள், நேற்று (07) மன்றத்தின் தலைவர் எம் ரீ. எம். பாரிஸ் தலைமையில், திருகோணமலை சாம்பல்தீவு, இலுப்பைக்குளம், மாங்காயூற்று ஆகிய கிராமங்களில் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடு, பொருள் விலையேற்றம் போன்ற அசௌகரியமான சூழலில் நாளாந்த கூலித் தொழில் செய்கின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 150 குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நட்டில் தற்போது ஏறபட்டுள்ள பொருளாதார ரீதியான இடர்பாடுகளைக் கருத்திற் கொண்டு வன்னி ஹோப் நிறுவனம் ஊடாக திருகோணமலை மக்கள் சேவை மன்றம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள வறிய மக்களுக்கு அத்தியாவவசிய உலர் உணவுப் பெதிகளை வழங்கி வருகின்றது. வன்னி ஹோப் நிறுவனத்தினால் சுமாா் 1,500 உணவுப் பொதிகள் ஆறு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹஸ்பர்

Web Design by Srilanka Muslims Web Team