திர்கால சவால்களும் எங்கள் குழந்தைகளும் - பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் - Sri Lanka Muslim

திர்கால சவால்களும் எங்கள் குழந்தைகளும் – பெற்றோர்களுக்கான கலந்துரையாடல்

Contributors
author image

A.S.M. Javid

தற்கால சூழ் நிலையில் பிள்ளைச் செல்வங்களின் எதிர் கால நலன் கருதி போதை வஸ்துக்களாலும், சமுதாய வழிகேடுகளாலும் ஏற்படும் சவால்களை எதிர்த்து பிள்ளைகளைக் காப்பாற்றி அவர்களுக்கு வளமான வாழ்க்கையையும், எதிர் காலத்தையும் சீரமைத்துக் கொடுப்பது எப்படி? என்பதை உள்ளடக்கியதாக எதிர்கால  சவால்களும் எங்கள் குழந்தைகளும் எனும் தலைப்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஷாபிர் முஹம்மட்ட ஹாசிமினால் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் ஒன்றினை அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அல் மஸ்ஜிதுல் முனீர், அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசல், அல்-ஹிக்மா கல்லூரி, மொஹிதீன் மஸ்ஜித், புறக்கோட்டை மஸ்ஜித் சம்மேளனம் என்பன வற்றின் ஒருங்கினைப்புக்களுடன்; மேற்படிக் கருத்தரங்கு நாளை (21) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு அல்-ஹிக்மா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம் பெறவிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team