தில்லு முல்லு » Sri Lanka Muslim

தில்லு முல்லு

cheat

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


பொல்லுப் போடுவதில்
புதுப் புது டெக்னிக்.
கள்ள சாமானை
கருப்பில் வாங்கல்.

கடனுக்கு வாங்கி
காசுக்கு விற்று
உடனே அக்காசுக்கு
உம்றாக்கு செல்லல்

பங்குடமை என்று
படத்தை ஓட்டி
சிங்கம் போல் பாய்ந்து
சிங்கப்பூர்க்கு எஸ்கேப்.

ஊராண்ட காணிக்கு
உறுதியை முடித்து
யாருக்கும் தெரியாமல்
யாவாரம் செய்தல்.

சீனாப் பொருளை
‘சீப்’பாய் இறக்கி
மேனாட்டுப் பொருளென
மெச்சி விற்றல்.

ஏழைக்கு என்று
யாரோ கொடுத்ததை
ஆளுக்கு கொஞ்சமாய்
அபேஸ் பண்ணிக் கொள்ளல்.

பேங்கு மெனேஜரை
பிரண்டாய் ஆக்கி
ரோங்கான கடனில்
ரோலிங் அடித்தல்

லட்சக் கணக்கில்
லஞ்சம் கொடுத்து
கொச்சிக்காய் மூடைக்குள்
குடுவைக் கடத்தல்

‘தில்’லோடு செய்த
தில்லு முல்லு வேலையெல்லாம்
முள்ளாகக் குத்தும்
மூச்சிழுக்கும் தருணத்தில்…!

Web Design by The Design Lanka