திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு - Sri Lanka Muslim

திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு

Contributors

-ஹாசிப் யாஸீன்-

திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும், அதற்கான  கிராம மட்ட செயலணி அமைப்பது தொடர்பாகவும் சாய்ந்தமருது  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

 

சாய்ந்தமருது  பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்களுக்கு ஒக்டோபர் 20ஆம் திகதி தேசிய ரீதியில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு பிரதேச ரீதியாக  எவ்வாறான முன்னாயத்தங்களை மேற்கொள்வது எனவும், இதற்கான கிராம மட்ட செயலணிகளை  எவ்வாறு தெரிவு செய்வது என்பது தொடர்பாகவும் அறிவூட்டப்பட்டது.

 

இதில் மாவட்ட செயலக திவிநெகும சிரேஷ்ட  முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், திவிநெகும முகாமையாளர்களான ஏ.சீ.ஏ.நஜீம், எஸ்.றிபாயா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத்,  திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான்;, திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

11

 

12

 

13

 

14

 

15

Web Design by Srilanka Muslims Web Team