தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளிடம் உண்மையை கூறினார் ரிஷாட் பதியுதீன்..! » Sri Lanka Muslim

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளிடம் உண்மையை கூறினார் ரிஷாட் பதியுதீன்..!

Contributors
author image

Editorial Team

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஸ்கைப் காணொளி மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 2 ஆவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கேள்வி :-
நீங்கள் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள் என ஆணைக்குழு அவரிடம் வினவியது.

பதில் :-
“வடமாகாணத்தில் 2 வீதமான சிங்களவர்களும் 5 வீதம் முஸ்லிம்களும் உள்ளனர்.
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களை அவர்களது கிராமங்களிலிருந்து வெளியேற்றினர்.

2009 ஆம் ஆண்டில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கவில்லை. அப்போது பசில் ராஜபக்ஸவே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தார். நான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்ததனால் அவரின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.

மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை அருகே வசிக்கும் சுமார் 5,000 சிங்கள மக்கள் – கலபோகஸ்வேவ – நாமல்கம என்ற பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

அங்கு 100 வருடங்களுக்கு அதிகமான பெரிய மரங்கள் இருந்தன. மீள்குடியேற்றத்தின் போது அந்த மரங்களும் வெட்டப்பட்டன. ஆனால் அதற்கு எதிராக யாரும் முறையிடுவதில்லை ; மாறாக அனைவரும் வில்பத்து , கல்லாறு காடழிப்பு பற்றியே அதிகம் பேசுகின்றார்கள். உண்மையாகவே அங்கு காடழிப்பு இடம்பெறவில்லை.

எனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யவுள்ளேன்” என்றார்.

றிஷாத் பதியுதீன்- இவ்வாறு தெரிவித்த சந்தர்ப்பத்தில், கல்லாறு தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு நீதிபதிகள் ஆணைக்குழுவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka