தீர்மானம் எடுப்பதில் ஐந்து நாள் தாமதித்தால் கூட குறைந்தது 700 பேராவது மரணிக்கலாம் - பேராசிரியர் சுனேத் அகம்பொடி..! - Sri Lanka Muslim

தீர்மானம் எடுப்பதில் ஐந்து நாள் தாமதித்தால் கூட குறைந்தது 700 பேராவது மரணிக்கலாம் – பேராசிரியர் சுனேத் அகம்பொடி..!

Contributors

நாளாந்தம் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை 150 ஐ விட அதிகரிக்கலாம் என ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் சமூக நோய் பிரிவின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித் துள்ளார்.

நாட்டை உடனடியாக முடக்கினால் மாத்திரம் அடுத்த 20 நாட்களில் 1,200 பேர் பலியாகாமல் தடுக்க முடியும் என பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

தீர்மானம் எடுப்பதில் ஐந்து நாள் தாமதமானால் கூட குறைந்தது 700 பேராவது மரணிக்கலாம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் மரணிப்போரின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 150 ஐ தாண்டும் என அவர் கடந்த 7 ஆம் திகதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team