தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் - முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை - Sri Lanka Muslim

தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் – முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை

Contributors
author image

Editorial Team

அரசாங்கம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

 

அரசாங்கம் தொடர்ந்தும் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் நாமும் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்.

 

ஊவா மக்கள் போர் வெற்றி, அபிவிருத்தி போன்றன குறித்து கூடுதல் முக்கியத்தும் அளிக்கவில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

 

மக்களினால் உணரக்கூடிய வகையிலான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

 

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளமையே, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வர்களிக்காமைக்கான காரணமாகும்.

 

வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நீங்கள் மீண்டும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வீர்கள், இவ்வாறான ஓர் பின்னணியில் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் கருதியே முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்கவில்லை.

 

இது தான் உண்மை.

இந்த விடயத்தை எமது கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

 

உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையிலேயே நாம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றோம்.

எனினும், உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் இதுவரையில் அமுல்படுத்தவில்லை.

 

இதனால் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டிய போதிலும்,  எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

 

ஊவா மாகாணசபைத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு ஹசன் அலி இந்த விளக்கங்களை அளித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team