தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக முர்ஸி மீது புதிய வழக்கு! - Sri Lanka Muslim

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக முர்ஸி மீது புதிய வழக்கு!

Contributors

-கெய்ரோ-

எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி மீது ராணுவ சர்வாதிகார அரசு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக புதிய வழக்கொன்றை பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டுக் குழுக்களுடன் இணைந்து நாட்டிற்கு எதிராக சதி ஆலோசனை நடத்தினார் என்பது குற்றச்சாட்டு. எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொலை செய்ததாக பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி ஏற்கனவே முர்ஸி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முர்ஸியையும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இதர 34 பேரையும் இவ்வழக்குகளில் விரைவில் விசாரணை செய்ய ப்ராஸிக்யூட்டர் உத்தரவிட்டுள்ளார். ஃபலஸ்தீனில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லாஹ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து முர்ஸி  செயல்பட்டார் என்று ப்ராஸிக்யூட்டர் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.(thoo)

 

Web Design by Srilanka Muslims Web Team